இந்திய அணி 28 ஆம் தேதி நடந்த 4ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 21 ரன் வித்யாசத்தில் தோற்றது.இதனால் இந்திய அணி தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டியில் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது இந்த போடட்டியில் அனைத்து இந்திய வீரர்களும் சற்று கணிசமாக பங்களித்தனர்.

ஆனால், கேதர் ஜாதவ் தனியாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தினார். கேதார் ஜாதவ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 67 ரன்கள் சேர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும் . அவர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவர். துவங்கிய காலத்தில் சரியான ஆஃப் ஸ்பின் வீசி வந்தார்.

ஆனால் கடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து சற்று வித்யாசமான ஆப் ஸ்பின் வீசி வருகிறார். அவரது சராசரியான உயரத்தியப் பயன்படுத்தி மலிங்கா வீசுவது போல் தோல்பட்டைக்கு இணையாக தனது கையை மட்டுப்படுத்தி வீசி வந்தார்.

அவரின் அது போன்ற பந்துகள் தற்போது அவருக்கு உதவியாகத்தான் இருக்கிறது. அப்படி வீசும் பந்துகளில் ஒரு சில பந்துகள் பேட்ஸ்மேன் கணிக்கும் உயரத்தை விட சற்று தாழ்வாக சென்று குழப்பதை ஏற்ப்படுத்தி விக்கெட்டுகளை பறிக்கும்.

இது போன்ற பந்துகள் என்ன் வகையான பந்து, என்ன வகையான பந்து வீச்சு என இன்னும் தெளிவான விளக்கம் இல்லை. இதனை வைத்து தான் ஹிட் மேன் ரோகித் சர்மா அவரை கலாய்த்துள்ளார்.

5ஆவது போட்டி நாக்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளது, அதற்காக இந்திய அணியினர் இன்று விமானம் மூலம் நாக்பூரை வந்தடைந்தனர். அப்போது விமான நிலையத்தில் வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார் ரோகித் சர்மா.

அந்த படத்தில், ரோகித் சர்மாவுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஜவேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ் உடனிருந்தனர்.

அவருகளுக்கு சரியாக காலய்க்கும் விதத்தில் குறிப்பும் கொடுத்து பதிவேற்றியிருந்தார். அதாவது நான் இரண்டு ‘ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன்’ இருக்கிறேன். மேலும் ஒருவர் இருக்கிறார் அவரும் பந்து வீசுவார், ஆனால் அவர் என்ன வீசுகிறார் என எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது என  கால்ய்த்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மாவிற்கு தனது சகாக்களை ட்விட்டர் பக்கத்தில் கலாய்ப்பது புதிதல்ல.

முன்னர் ஒரு முறை இவ்வாறு தான் யுவராஜ் சிங்கை காலய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பேட்டிங்கை தவிர அனைத்தையும் செய்கிறார் இந்த மனிதர் பங்கமாக.

மேலும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.