ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் விஷால், ஆர்யா, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விஷால் பேசும்போது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு நான் கிளம்பி வரும்போது, ஆர்யா என்னிடம் உன்னோட படத்தின் ஆடியோ விழாவுக்கே நீ போகமாட்டாய்.. அப்படியிருக்கையில் நீ எப்படி இதில் கலந்துகொள்கிறாய் என்று கேட்டான். அதற்கு நான், இன்னும் இரண்டு வருடத்துக்கு திரையுலகம் இப்படித்தான் இயங்கப் போகிறது. நாம் சம்பந்தப்படாத படமாக இருந்தாலும், அதை விளம்பரப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்று சொன்னேன்.

இந்த படத்தின் தலைப்பே ரொம்பவும் அருமையாக உள்ளது. ஷக்தி சிதம்பரம் அவர்கள் தொடர்ச்சியாக படம் தயாரிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். எஸ்.ஏ.சந்திரசேகர், தேனப்பன், டி.சிவா என எல்லோருமே நல்ல நண்பர்கள்தான். என்னை எவ்வளவு திட்டினாலும், கோபமே வராது. ஏனென்றால் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

விஷாலை கைது செய்… கைது செய்… கைது செய்’ என்ற செய்தியை பார்த்துவிட்டு எனது அம்மா-அப்பா இருவருமே ‘சூப்பர் காமெடி’ என்று காமெடி சேனல் பார்ப்பதுபோலவே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் இந்த மாதிரி விஷயங்களைத்தான் ரசித்து பார்ப்பார்கள். நடிகர் சங்கத்தில் நாங்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையுமே நிறைவேற்றிவிட்டோம். என்னை வளர்த்த திரையுலகம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என இளைஞர்கள் வந்துள்ளோம்.

இவ்வாறு விஷால் பேசியுள்ளார்.