நடிகை சந்தியா என்றதும் உடனே காதல் படம் தான் நினைவிற்கு வரும். பெயர் கூட காதல் சந்தியா என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். ஜிகர்தண்டா, ரெட்டை ஜடை, ஸ்கூல் பொன்னு என பல விதத்தில் இவரது முகம் வந்துபோகும்.

கடந்த 2015 சென்னை வெள்ளம் வந்த சமயத்தில் தொழிலதிபர் வெங்கட்டை திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் செப்டம்பரில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அன்னையர் தினம் ஸ்பெஷலாக இவர் ஒரு நேர்காணலில் குழந்தையுடன் கலந்து கொண்டார். என் அம்மா என்னை நீயும் அம்மாவாகும் போது தான் என் அருமை தெரியும் என்பார்கள். அது உண்மை என நான் இப்போது உணர்கிறேன்.

குழந்தை பிறக்கும் சமயத்தில் பயமாக இருந்தது. ஆனால் அந்த நாளில் எனக்கு குழந்தை வேண்டாம். மாலுக்கு போகவேண்டும் என அடம் பிடித்து அழுதேன்.

ஆச்சர்யம் என்ன வென்றால் நான் பிறந்த மாதத்தில், எனது கணவர் பிறந்த தேதியில் எனக்கு குழந்தை பிறந்தது. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.