கிரிக்கெட் வீரர்கள் – சினிமா நடிகைகள் இடையேயான காதல், சிலருக்கு திருமணத்திலும் முடிந்திருக்கிறது, காதலுடன் முறிந்தும் போய் உள்ளது. இதில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இடையேயான காதல் எந்த ரகம் என்பது தற்போதைய சூழலில் சொல்ல முடியவில்லை.

ஏனென்றால் சில வருடங்களாக காதலித்த வந்த இந்த இருவரும்,  தங்களது காதலை முறித்து கொண்டதாக செய்தி வந்தது. கோலி திருமணம் செய்ய அனுஷ்காவை வற்புறுத்துவதாகவும், ஆனால் அதற்கு அனுஷ்கா மறுப்பதால் இவர்கள் காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதேசமயம் சல்மான் உடன் அனுஷ்கா நெருக்கமாகியிருப்பதால் இவர்கள் காதல் முறிந்து போனதாகவும் செய்தி வந்தது. ஆனால் இப்போது கோலியோ, அனுஷ்காவுடான காதலை தொடர எண்ணுகிறார் என்றும்.

அதிகம் படித்தவை:  காதலியோடு ஊர் சுற்ற கிளம்பினார் விராத் கோஹ்லி!

தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மனகசப்பை அனுஷ்காவின் சகோதரர் மூலம் சரி செய்ய முயற்சிப்பதாக கூறப்பட்டது. இதனால் அனுஷ்கா-விராட் கோலி காதல் மீண்டும் புத்துயிர் பெறும் என்று பாலிவுட்டில் பேசிகொண்டார்கள்.

அதன் பிறகு இவர்களின் காதல் பற்றி எந்த செய்தியும் வெளிவரவில்லை. அனுஷ்கா சர்மா அளித்த பேட்டி ஒன்றில், கோலியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். எனக்கு யார் மீதும் எளிதில் ஈர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் அது நீண்ட நாள் நீடிப்பதில்லை என்பது எனக்கு இப்போது புரிந்து விட்டது என்று கூறியுனார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விராட் கோலியின் உருவபொம்மை எரிப்பு!

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் விராட் ஹோக்லி இருவரும் டில்லியில் ஒரு ஷூட்டிங்கின் போது பங்கேற்றனர். அப்போது ஹோக்லியிடம் அமீர்கான், அனுஷ்காவிடம் உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ன என்று கேட்டார்.kohli

இது குறித்து பதில் கூறிய கோலி, அனுஷ்காவிடம் பிடித்தது, அவரின் நேர்மை மற்றும் அரவணைக்கும் பன்பு. பிடிக்காத விஷயம் என்று எதுவும் இல்லை. ஆனால் அவர் எப்போது தாமதமாக வருவதை நான் டிஸ்லைக் செய்கிறேன் என்றார். நிரைய இடங்களில் காத்திருந்து கஷ்டப்பட்டிருப்பர் போல.