Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொடுக்கைலைனு சொன்னாரே.! வாங்கிவிட்டதைச் சொல்லவில்லையா? கௌதமியைச் சீண்டிய கமல்

நடிகர் கமல்ஹாசனுடன், ஏறக்குறைய பத்தாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார் நடிகை கௌதமி. சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் தம்பதிகள் போலவே இவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கமலின் மகள்களும், கௌதமியின் மகளும் சகோதரிகள் போலவே பொது வெளியில் நடந்து கொண்டனர். இந்தநிலையில், நடிகர் கமலைக் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் பிரிந்தார் கௌதமி. இந்த தகவல் இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டதோடு, இருவரும் தனித்தனியாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

கமலைப் பிரிந்த பின்னர் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கௌதமி அவ்வப்போது தலைகாட்டினார். அப்போதெல்லாம் கமல் குறித்த கேள்வியை மிகவும் கவனமாக அவர் தவிர்த்து வந்தார். இந்தசூழலில் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் கட்சியின் பெயரையும் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாகக் கமல் குறித்து பேசாமல் இருந்த கௌதமி, திடீரென கமல் தனக்கு சம்பள பாக்கியைத் தரவில்லை என ஸ்டேட்மெண்ட் விட்டார். அதில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு பணிகளை அவருக்காகச் செய்ததாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றியதாகவும் கூறியிருந்தார். கமல் நடித்த விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார நிபுணர் பணியை செய்தும், அதற்கான சம்பளம் இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து கமலுக்கு பல்வேறு முறை நினைவூட்டியும் சம்பளத்தைத் தரவில்லை என கௌதமி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்குக் கமல் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்துவந்தது.

இந்தநிலையில், தனது கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டெல்லி வந்திருந்த கமலிடம், கௌதமிக்குச் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த கமல், சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறினாரே… கொடுக்கப்பட்ட பின்னர், அதை வாங்கிவிட்டதாகக் கூறினாரா? என்று எதிர்க்கேள்வி கேட்டார். இதனால், கூட்டத்தில் சிறிதுநேரம் அமைதி நிலவியது. கௌதமிக்குத் தான் ஊதியம் கொடுத்துவிட்டதாக இதன்மூலம் கமல் விளக்கமளித்துவிட்டார். இதுகுறித்து கௌதமி தரப்பில் என்ன சொல்லப்போகிறார்களோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top