தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமான ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அவர், தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பால் ரகுல் ப்ரீத் சிங் முத்திரை பதித்திருக்கிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் கடந்த் 2014-ம் ஆண்டு அய்யாரி படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்த அவர், தற்போது அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  நம்ம ஒன்னும் களவாணி பயலுங்க இல்ல பாரதிராஜா நடிப்பில் படைவீரன் ட்ரைலர்.!
rakul-preet
rakul-preet

அந்த படம் குறித்து மனம் திறந்துள்ள ரகுல், அஜய் தேவ்கான் மற்றும் தபு ஆகியோரின் நடிப்பைப் பார்த்து அவர்களுடன் ஒருநாள் நடிக்கும் வாய்ப்பு கிட்ட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால், பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய நான்கே ஆண்டுகளில் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அந்த பட வாய்ப்பு வந்ததிலிருந்து எனது கால்கள் தரையிலேயே இல்லை என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார்.

அஜய் தேவ்கான் மற்றும் தபு குறித்து பேசுகையில், அவர் மிகப்பெரிய ஸ்டார். மிகச்சிறந்த நடிகர். ஆனால், உடன் பணிபுரியும் டெக்னீஷியன்களையோ அல்லது நடிகர்களையோ அவர் எப்போதும் மரியாதைக் குறைவாக நடத்தியதில்லை. அவருடன் நடிப்பது எனக்கு கனவு போல் இருக்கிறது. தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மிகச்சாதாரணமாக எல்லோருடனும் அவர் பழகுகிறார். குடும்ப வாழ்வுக்கு சரியாக நேரம் ஒதுக்கத் தெரிந்த அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவ்வப்போது விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகிறார். பிஸியான ஷெட்யூலிலும் குடும்பம் மீதான அக்கறையை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதேபோல், தபு சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான அவருடன் நானும் திரையில் தோன்றும் சூழல் வரும் என்று நினைத்துக் கூடப் பார்த்தில்லை என்றார்.

அதிகம் படித்தவை:  உழைக்கும் மக்கள் வெளியிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவத்திற்கான முன்னோட்டம் மேற்கு தொடர்ச்சிமலை ட்ரைலர்.!
Rakul-Preet-Singh1rakul

நடிக்கும் கேரக்டர் குறித்து பேசிய அவர், இதுகுறித்து தற்போது பேசுவது நன்றாக இருக்காது. இருப்பினும், இதுபோன்ற ஒரு ரோலில் நான் இதுவரை நடித்ததில்லை. நிச்சயம் இந்த ரொமாண்டிக் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று முடித்துக் கொண்டார்.