புதன்கிழமை, நவம்பர் 13, 2024

நரம்பு வலியோடு action காட்சிகளில்.. ஒவ்வொரு நாளும்.. சமந்தா உருக்கம்

மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்புக்கு உள்ளானார் சமந்தா. இந்த நோய் பாதிப்பு தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தி பலவீனமாக உணர செய்யும். இந்த நோய் பாதிப்பின் சிகிச்சைக்காகவும், இதிலிருந்து மீண்டு வருவதற்காகவும் நடிப்பில் இருந்து சில காலம் பிரேக்கும் எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையே மயோசிடிஸ் பாதிப்பு இருந்தபோதே சிட்டாடல் வெப்சீரிஸ் கமிட்டான சமந்தா, அதில் முழு அர்ப்பணிப்புடன் நடித்து முடித்தார். தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நிலையில் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் சமந்தா.

காலையில் ட்ரீட்மெண்ட், மாலையில் ஆக்ஷன்

சமந்தா நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸான சிட்டாடல்: ஹனி பன்னி வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவும் இந்த தொடரில் நடித்தது குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

இப்படி இருக்க சமீபத்தில் சமந்தா அளித்த ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, “காலையில் நரம்பு வலி சிகிச்சை எடுத்துக்கொள்வேன். பின்னர் மதியம், மாலை வேலையில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன். எனவே, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் சவாலாக இருந்தது.”

“காலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும், ‘உன்னால் சுட முடியுமா?’ என்று கேட்பார்கள். எனக்கும் confidence அந்த நேரத்தில் இருக்காது. என்னால் இதை செய்ய முடியுமா என தெரியவில்லை என்று சொன்னேன். இருப்பினும் எப்படி இதையெல்லாம் செய்து முடித்தேன் என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை” என்றார்.

இதை பார்த்த ரசிகர்கள். ‘stay strong sam’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்

- Advertisement -spot_img

Trending News