வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அந்த சீன் எடுக்கும்போது அழுதுட்டேன்! சினிமாவில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன நயன்தாரா

பெரும் சர்ச்சைகளுக்கு இடையே, நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. அதில் தனது காதல் கதையோடு சேர்த்து, தான் சினிமாவுக்கு வந்த நாள் முதல் தான் சந்தித்த சவால்களை கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண வீடியோவை Netflix OTT தளத்திற்கு வீற்றிருக்கிறார் நயன்தாரா. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, “நானும் ரவுடிதான்” படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இப்படி பல பஞ்சாயத்துக்கு நடுவில் வெளியானது இந்த ஆவணப்படம்

நான் அழுதுட்டேன்!

இதில் பல விஷயங்களை கூறியிருக்கிறார் நயன்தாரா. அதிலும் குறிப்பாக தனது முந்தைய relationship பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார். அப்படி ஒரு கட்டத்தில், தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்ததற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

நயன்தாரா ஸ்ரீ ராம ராஜியம் படத்தில், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் பலர் காதல் சர்ச்சையில் தொடர்ந்து சிக்கும் நயன்தாரா போன்ற ஒரு நடிகை, தெய்வீக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் வந்தது. அதையெல்லாம் தாண்டி வெளியாகி படம் வெற்றிபெற்றது. மேலும் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுகளும் கிடைத்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒன்றை நினைவுகூர்ந்திருந்தார் நயன்தாரா. அதில் அவர், ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும் போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன்.

எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிபட்ட சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஆனால் எடுத்த இந்த முடிவுக்கு நான் திருமணம் செய்ய இருந்த அந்த நபரே காரணம் என்று மறைமுகமாக பிரபு தேவாவை கூறியிருந்தார்.

- Advertisement -

Trending News