Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதெல்லாம் முடியாது… வம்பு பிடித்த பிந்து மாதவி
பக்கா படத்தின் இயக்குனருக்கும், நாயகியான பிந்து மாதவிக்கும் படப்பிடிப்புகளில் சண்டை தான் அதிகம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அமைதியான முகம், அலட்டல் இல்லாத மேக்கப் என இருப்பவர் நடிகை பிந்து மாதவி. இவர் தெலுங்கு திரையுலகில் ஆவக்காய் ஊறுகாய் படத்தின் மூலம் அறிமுகமானர். தொடர்ந்து தெலுங்கு சினிமா உலகில் பல படங்களில் நடித்தவர். 2009ம் ஆண்டு பொக்கிஷம் படத்தால் கோலிவுட்டில் அறிமுகமானார். வெப்பம், சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய தமிழ் படங்கள் இவரின் சினிமா கேரியரில் ஏணியாக அமைந்தது.
2016ல் வெளிவந்த ஜாக்சன் துரை படத்திற்கு பிறகு பிந்து மாதவி எந்த படத்திலும் நடிக்கவில்லை. சரியான வாய்ப்புகள் அமையாததால், சினிமாவில் இருந்து பெரிய ப்ரேக் எடுத்தார்.
இவரின் ரீ -எண்ட்ரி சினிமாவில் இல்லை. தமிழில் ஒளிபரப்பப்பட்ட முதல் சீசன் பிக்பாஸில் தான். ஓவியா அழுது புலம்பிக் கொண்டு இருந்த நேரம், வீட்டுக்குள் நுழைந்தவர் பிந்து. இதனால், இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்படவில்லை. தொடர்ந்து, யாருக்கும் ஜால்ரா போடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தார். இதனாலே, வீட்டில் கடைசி வரை தங்கி இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவர் தான். இதனால், பிக்பாஸ் இவருக்கு பெரும் வாய்ப்புகள் கொடுக்கும் என எதிர்பார்த்தவருக்கு, ஏற்பட்டது பெரும் ஏமாற்றம் தான். விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் பக்கா படத்தை தவிர பிந்துவிற்கு சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமைதியான பிந்து பக்கா பட இயக்குனருடன் படப்பிடிப்பில் தொடர்ந்து சண்டை போட்டு இருக்கிறார். இவரும் சில நடிகைகள் போல் தான் என நினைக்காதீர்கள். படத்தில் இரட்டை அர்த்த வசனங்களை பிந்துவை பேச இயக்குனர் கோரிக்கை வைத்தாராம். ஆனால், பிந்து தன்னால் இதெல்லாம் முடியாது என மறுத்து விட்டாராம். இதுகுறித்து, வாய் திறந்து இருக்கும் பிந்து படத்தை ஒப்புக்கொண்டதால் மட்டுமே நடித்து கொடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
