Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி.. கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நடிகை காஜல் அகர்வால் மறுத்து இருப்பதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவின் ஸ்டார் ஐகான் ரஜினிகாந்த். அடித்தடி, வித்தியாசமான கேரக்டர் என பெயர் போன நடிகர்களுக்கு மத்தியில் ரிஸ்க் எடுக்காமல் தன் ஸ்டைலில் கெத்து காட்டியவர். கோலிவுட்டில் தல, தளபதி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அளவில்லாத ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே சூப்பர்ஸ்டாரின் ரசிகராக தான் இருப்பர். பெரும்பாலும், ஒரு படத்தை முடித்து விட்டு அப்படம் ரிலீஸாகி வரவேற்பை பெற்ற பிறகே அடுத்த படத்தில் நடிக்க தொடங்குவார். ஆனால், இந்த முறை காலா வெளியீடு சமயத்திலேயே அவருக்கு இரண்டு படங்கள் கைவசம் இருந்தன. படப்பிடிப்பை முடித்து கிராபிக்ஸ் பணிகளால் தேங்கி நிற்கிறது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.ஓ படம். அதை தொடர்ந்து, இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமயமலை பகுதியில் தொடங்கி இருக்கிறது. முதல்முறையாக இப்படத்தில் ரஜினிக்கு சமமான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். அதைப்போல, பாபி சிம்ஹா, சனத் ஷெட்டி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. பல வருட இடைவேளைக்கு பிறகு இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஆனால், ரஜினிக்கு இன்னும் நாயகி யார் என்ற தேடலுக்கு முடிவு எட்டப்படவில்லை.
முதலில், த்ரிஷா, அஞ்சலி, தீபிகா படுகோனே இப்பட்டியலில் இருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்துடன் நடிப்பது மட்டுமே லட்சியம் எனக் கூறிய த்ரிஷாவிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருந்தும், அவரை படக்குழு தேர்வு செய்யவில்லை. தொடர்ந்து, சிம்ரன் இப்படத்தில் நாயகி வேடத்தை ஏற்று இருக்கிறார் என தகவல்கள் கசிந்தாலும், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், இப்படத்தின் நாயகி வாய்ப்பு முதலில் காஜல் அகர்வாலுக்கு தான் சென்றதாம். கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்ட காஜலுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். இதனால் இந்த வாய்ப்பை மறுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பல நடிகைகளின் லட்சியமாக இருக்கு வாய்ப்பை காஜல் மறுக்க எப்படி மனம் வந்தது என கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.
