‘மிஸ் வேர்ல்டு 2000’ பட்டம் பெற்ற இவருக்குத் தற்போது 35 வயதாகிறது.விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் இது. அதன்பிறகு ஹிந்திப் படங்களில் கவனம் செலுத்தியவர், தமிழில் நடிக்கவேயில்லை.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.‘விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான்’ என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

priyanka

இந்நிலையில், ட்விட்டரில் இரண்டு கோடி ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்தியாவில் 2 கோடி ஃபாலோயர்களைக் கொண்டுள்ள 10வது பிரபலம் இவர். இதையொட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், சுவாரசியமான சில கேள்வி – பதில்களைப் பார்க்கலாம்.

கேள்வி: எந்த பெண் பாப் பாடகருடன் இணைந்து பணியாற்ற விரும்புகீறீர்கள்?

பதில்: ரிகன்னாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அவர் மிகச்சிறந்தவர்.

Priyanka_Chopra_Beautiful_Woman_World
Priyanka_Chopra

கேள்வி: 2018ஆம் ஆண்டில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: நான் இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.

கேள்வி: வருண் தவானைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்?

பதில்: பரபரப்பானவர்.

கேள்வி: ‘தமிழன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா?

பதில்: விஜய்யுடன் இணைந்து நடிக்க நான் ஆவலாக உள்ளேன். ஏனெனில், நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை.

கேள்வி: உங்கள் பிட்னெஸ் ரகசியம்?

பதில்: உங்களுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஜிம்முக்குச் செல்லுங்கள்.

இப்படி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் பிரியங்கா. இதற்க்கு முன்பும், சில நாட்களுக்கு முன் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்ற ஏராளமான மக்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

priyanka chopra

இந்நிலையில் இதுகுறித்து பெண்கள் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரியங்கா, ”ஹாலிவுட்டில் மட்டும் ஒரேயொரு ஹார்வி வெய்ன்ஸ்டீன் இல்லை. இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகள் இனி வெளிச்சத்துக்கு வரும் என்று நினைக்கிறேன்.

இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. பாலியல் தொந்தரவுகள் உலகம் முழுக்க இருக்கின்றன. பெண்களின் வலிமையை எடுத்தாள நினைக்கும் ஆண்களின் அதிகாரம் அது.

உலகம் எப்போதுமே தலைசிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. இது பாலினம் குறித்த பிரச்சினை அல்ல. பாலியல் குறித்ததும் அல்ல. அதிகாரம் பற்றிய வேட்கை அது.

இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் பறிபோகும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் விருப்பமில்லாமலேயே உடன்படுகின்றனர்” என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது