பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்தி வந்தார்.

சில தினங்களுக்கு முன் biggboss நிகழ்ச்சி முடிவடைந்தது,இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது முதலில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த நிகழ்ச்சியில், சிலருடன் சேர்ந்துகொண்டு ஒரு சிலரை கார்னர் செய்தது, ஓவியாவுடன் நேரடியாக மோதியது, பொய்கள் சொல்லி மாட்டிக்கொண்டது எனப் பல காரணங்களால் அவரின் மீது பல விமர்சனங்கள் வந்தன. அவரைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன. போட்டியாளர்களான காயத்ரியும், ஜூலியும் பெரும்பாலான மக்களால் வெறுக்கப்பட்டு வந்தனர்.

ஜூலியானா சில  நாட்களுக்கு முன்பு ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். வெளியே போகும்போது, கமலஹாசன், தனது தங்கையை வெளியே அனுப்புவதாகச் சொல்லிப் பரிவோடு அனுப்பி வைத்தார்

தன்னை மாற்றிக்கொண்டு ஓரளவு நல்ல பெயருடன் அவர் வெளியே வந்தார். அதன்பிறகு, அவர் வெளியே வந்ததும் அவர் கிராமத்திற்குப் போய்விட்டதாகவும், பரணியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும் பல வதந்திகள் உலாவின.

ஆனால், ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வந்திருக்கும் ஜூலி இப்போது விஜய் டி.வி-யின் Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டது. ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்…’ பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார். ‘வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… ஜூலிடா’ எனப் பேசி மிரட்டுனார். விஜய் டி.வி-யோட செட் ப்ராப்பர்ட்டி ஆக்காம விடமாட்டாங்க போலயே என்று கலாய்த்தார்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் ஜுலி. இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவருடன் பேட்டி எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வானொலியில் இவரை பேட்டி காண்கையில் உங்களுக்கு தல-யை பிடிக்குமா? தளபதி பிடிக்குமா? என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘நான் தளபதியின் தீவிர ரசிகை, ஆனால், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்தும், ஓவியாவுடனான நட்பு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here