புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஃபகத் பாசில் அப்படி பண்ணது எனக்கு கஷ்டமா போச்சு! அல்லு அர்ஜூன் ஓபன் டாக்

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் புஷ்பா 2. இப்படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்துள்ளார். சுகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ராஷ்மிக மந்தனா, ஃபகத் பாசில், ஸ்ரீடேஜ், பிரியாமணி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளன. ஸ்ரீலீலால் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். குமா புரோசெக் ஒளிப்பதிவு செய்ய, தேஸ்ரீ பிரசாத், தமன் இருவரும் இசையமைத்துள்ளனர்.

இதுவரை வெளியான ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் ஆகிய படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்த மாதிரி, புஷ்பா 2 படத்திற்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே புஷ்பா 1 பான் இந்தியா படமாக வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பெய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட புஷ்பா தி ரூல் படம் எல்லா மொழிகளிலும் எதிர்பார்ப்பை கூடியுள்ளது. சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளிகி 100 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றது.

பீகாரில் பல லட்சம் பேர் இந்த டிரெயிலர் நிகழ்ச்சியில் கூடினர். எனவே புஷ்பா 2 படத்துக்கு புரமோசன் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் பங்கேற்று இப்படம் குறித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து, இப்படம் குறித்து புதிய தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தில் வில்லன் வேடத்தில் மாஸ் காட்டிய ஃபகத் பாசில், அதைவிட 2 வது பாகத்திலும் வில்லனாக மிரட்டியுள்ளார். அவருக்கு கூடுதல் காட்சிகள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஃபகத் பாசில் குறித்து பேசிய அல்லு அர்ஜூன்

பகத் பாசில் புஷ்பா 2 பட புரமோசனில் பங்கேற்காத நிலையில், கேரளாவில் நடந்த இப்பட புரமோசன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் பங்கேற்றார், அப்போது, ஃபகத் பாசில் கலந்துகொள்ளாதது பற்றி அல்லு அர்ஜூன் பேசியிருந்தார்.

அதில், நான் அல்லு அர்ஜூன் அல்ல. உங்களின் மல்லு அர்ஜுன், கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் நானும், ஃபகத் பாசிலும் ஒன்றாக நின்றிருந்தால், அது சிறந்ததாக இருந்திருக்கும். ஆனால், இந்த மேடையில் ஃபகத் பாசிலை நான் மிஸ் செய்கிறேன்.

இருப்பினும், கேரள ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். ஃபகத் பாசில் புஷ்பா 2 ல் சூப்பராக நடித்திருக்கிறார். அவருக்கு இப்படம் பேரும் புகழும் வாங்கித் தரும். கேரள சினிமாவையும் உங்களையும் ஃபகத் பாசில் பெருமைப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News