Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதை நிருபிக்கவே தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்-யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது அந்த எதிர்ப்புகளை தாண்டி திரைப்படம் வெற்றியடைந்தது.
இந்த நிலையில் தற்பொழுது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் கலந்த்துகொண்டுள்ளார், இவர் ஏன் இதில் கலந்துகொண்டேன் என்ற காரணத்தை அவரே கூறியுள்ளார், இதில் அவர் கூறியதாவது நான் 16 வயதிலேயே துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன் அப்பொழுதே பிரபலமாகிவிட்டேன்.
எனது பெற்றோர்கள் எனக்கு அனைத்தும் கற்று கொடுத்து ஓப்பனாக வளர்த்துள்ளார்கள் இப்பொழுது 18 வயதாக இருந்தாலும் 24 வயது பெண்ணிற்கு இருக்கும் மெச்சுரிட்டி இருக்கிறது என கூறியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததால் என்னை தவறாக பேசுகிறார்கள்.
நான் யார் என்று எனக்கு தெரியும் எனது குடும்பத்திற்கும் தெரியும் மற்றவர்களும் என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.
