Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

“நான் ரோபோ கிடையாது, எனக்கும் ரத்தம் வரும்.” விராட் கோலி அதிரடி பேட்டி.

இன்று இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், நேற்று விராட் கோலி நிருபர்களிடம் பேசினார். அதில் அவர் ரொட்டேஷன் பாலிசி, தன்னுடைய ஒய்வு, கிரிக்கெட் ஒர்க் லோட் பற்றி பேசினார்.

Team India arriving for practice

பிசிசிஐ தற்பொழுது ரொட்டேஷன் பாலிசி என்பதை கடை பிடித்து வருகிறது. சில பல சீரிஸ்களாகவே ஒய்வு என்ற பெயரில் வீரர்களை அணியில் சேர்ப்பதில்லை. சொல்லப்போனால் மிக நீண்ட ரெஸ்டுக்கு பின் இன்று தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாடப் போகிறார்கள். 2016 ஆரம்பத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 7032 , ஜடேஜா 6346 பந்துகள் வீசியுள்ளார் என்பதே புள்ளி விவரம்.

இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பே, இரண்டாவது டெஸ்ட் முடிந்ததும் விராட் கோலிக்கு ஒய்வு வழங்கப்படும் என்று மீடியாக்கள் சொல்லத்தொடங்கியது. மேலும் அந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் திருமணம் என்றெல்லாம் புரளி கிளம்பியது. இதனை இந்திய அணியின் செலெக்டர் எம்.எஸ்.கே பிரசாத் மறுத்தார். எனினும் தேர்வு கம்மிட்டே கலந்து ஆலோசித்து அவருக்கு ரெஸ்ட் விரைவில் வழங்கும் என்றும் கூறினார்.

விராட் கோலி பேசுகையில்

கண்டிப்பாக எனக்கும் ரெஸ்ட் தேவைப்படும். எனக்கு மட்டும் தான் தெரியும் எது சரியான நேரம் என்று. அப்பொழுது நான் இதை பற்றி டீம் மேனேஜ்மென்ட் இடம் பேசுவேன். நான் ஒன்றும் ரோபோட் கிடையாது. கத்தியால் என்னை கிழித்தீர்கள் என்றால் எனக்கும் ரத்தம் வரும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த ஒர்க் லோட் விஷயம் புரிவதில்லை. ஆண்டுக்கு அனைத்து வீரரும் 40 போட்டிகள் தான் விளையாடுகிறார்கள். பின்னர் ஏன் மூன்று வீரருக்கு மட்டும் ரெஸ்ட் தேவைப்படுகிறது என கேட்க்கிறார்கள்.

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து பாட்ஸ்மான்களும் 45 ஓவர் விளையாடி இருக்க மாட்டார்கள், அதே போல் டெஸ்ட்டில் அனையது பந்துவீச்சாளரும் 30 ஓவர் வீசி இருக்க மாட்டார்கள்.

ஒருவீரர் எவ்வளவு நேரம் கிரீஸில் இருந்தார். எவ்வளவு ரன்கள் அவர் ஓடி எடுத்தார். எந்த மாதிரி சூழலில் ஒரு பௌலர் பந்து வீசினார், இவையெல்லாம் மேட்ச் பார்ப்பவர்களுக்கு புரியாது.ஒரு போட்டியில் விளையாடும் 11 வீரருக்கும் வித விதமான ஒர்க்கலோடு தான் இருக்கும்.

செட்டேஸ்வர் புஜாரா

உதாரணமாக டெஸ்ட் சீசனில் புஜாராவின் ஒர்க்கலோடு தான் அதிகம். அவர் நிறைய நேரம் கிரீஸில் நின்று விளையாடுபவர். அது தான் அவர் கேம் ஸ்டைல். அவருடைய ஒர்க் லோடை நாம் அதிரடி பேட்ஸ்மேன் ஒருவருடன் ஒப்பிட முடியாது. அவ்வாறு செய்வது தவறு.

அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டும். 20-25 வீரர்களை கொண்ட ஸ்டராங் டீம் ரெடி ஆகியுள்ளது. சில முக்கியமான தொடரின் பொழுது அவர்கள் பிரெஷ் ஆக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்று பார்மட்களிலும் விளையாடும் ஒரு வீரர் அதே அள்வு ஆர்வம், மற்றும் ஆட்டத்திறனுடன் ஒரு சீசன் முழுக்க விலையிடுவது என்பது எந்த ஒரு மனிதனுக்கும் சாத்தியம் இல்லை. எனவே ஒர்க்கலோடு பாலன்ஸ் செய்யவது அவசியமே.

சினிமா பேட்டை கொசுறு நியூஸ்
ஹர்டிக் பாண்டியா சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து தொடர்ந்து 30 போட்டிகள் விளையாடி உள்ளார். அவர் கேட்டுக்கொண்டதால் பெயரில் தான் அவருக்கு ரெஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2016 தொடங்கியதில் இருந்து விராட் கோலி இது வரை 4803 பந்துகள் எதிர்கொண்டுள்ளார். எனவே விரைவில் டெஸ்ட் இல்லாவிட்டாலும், ஒரு நாள் தொடரில் கண்டிப்பாக அவருக்கு ஒய்வு வழங்குவார்கள் என்பதில் சந்தேகேமே இல்லை.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top