Connect with us
boomerang-movie

நான் கார்த்தியை போல் அல்ல – விஷாலின் வெளிப்படையான பேச்சு

vishal karthi

News | செய்திகள்

நான் கார்த்தியை போல் அல்ல – விஷாலின் வெளிப்படையான பேச்சு

இது பற்றி சற்றுமுன் நிகழ்ந்த நேரலை பேட்டியில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருடன் சேர்ந்து பொன்வண்ணன் அவர்களும் பதிலளித்தார்.

அதில் அவர் கூறியதாவது…

vishal karthi“ஒன்றரை மாதம் ஒவ்வொரு கமிட்டியையும் பார்த்து போராடிய பிறகே இந்த விஷயம் நடந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கட்டிடம் கட்டி முடிந்ததும் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் நடிகர் சங்க உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும்.

சங்கப் பொருளாளரான நடிகர் கார்த்தி ஒரு புலி மாதிரி. வேலையை பாய்ந்து பாய்ந்து செய்வார். நான் கூட சில விதி முறைகளை மீறி நடப்பேன், ஆனால் கார்த்தி அப்படியல்ல விதிமுறைகளை சிறிதும் மீறாதவர். அதனால் கட்டிடப்பணி நிறைவடைந்ததும் கார்த்தி வரவு செலவுகளை முறையாக கவனித்துகொள்வார்.

நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் Insurance தவிர மற்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். இனி தயாரிப்பாளர் தேர்தல் வாக்குறுதிகள்தான் பாக்கி…

2018 ஆகஸ்ட் மாதம் கட்டிடப்பணி நிறைவடைந்து திறப்புவிழா கொண்டாடப்படும்.”

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பேட்டில நிறைய இடத்துல விஷால் வாயை மட்டும்தான் அசைத்தார். பொன்வண்ணன்தான் விஷாலுக்கு டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top