நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: திரிஷா விளக்கம்

காரணம் பீட்டா அமைப்பு இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த அமைப்புதான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.

இவர் பீட்டா அமைப்பில் உள்ளார். தற்போது இவர் கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது திரிஷா அதில் கலந்து கொள்ள சென்றார். அப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவிற்கு எதிராக கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத வகையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் திரிஷா கோவை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். பின்னர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கமல் திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தால். என்றாலும் திரிஷாவிற்கு எதிராக போர்க்குரல் அதிக அளவில் ஒலித்தது.

இந்நிலையில் நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்று திரிஷா விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், ‘‘நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமையடைகிறேன். தமிழ் சமுதாயத்தையும், பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவள் நான். தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Comments

comments