தல அஜித்துக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரபலங்கள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் ஸ்ரீசாந்த்.

சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் ஸ்ரீசாந்த். இவர் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார். இவர் நடித்துள்ள டீம் 5 என்ற படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் தமிழ் படங்கள் பற்றி கேட்டபோது, நான் தீவிர அஜித் ரசிகன், அவரின் அனைத்து படங்களையும் கண்டிப்பாக பார்த்துவிடுவேன் என கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்துக்கு டீம் 5 மூன்றாவது படம் என்றாலும் அது தான் முதலில் ரிலீசாக உள்ளது. அவரது குடும்பத்தில் இருந்து பலர் சினிமா துறையில் இருப்பதால் தான் சினிமாவிற்கு வந்ததில் ஆச்சர்யமில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.