இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பஸ்ட் லுக் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரமான உடற்கட்டுடன் சண்டைக்கு தயாராக நிற்கும் அஜித்தின் விவேகம் பஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அஜித்தின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். இதில் தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்துள்ளார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ராணா பாகுபலி படத்திற்காக உடலை மேருகேற்றி தனது கட்டுடலால் ரசிகர்களைக் கவர்ந்தார். விவேகம் படத்தின் பஸ்ட் லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராணா, “இது தான் ஊக்கம்.. இது தான் தூண்டுதல்.. உண்மையில் வியப்பளிக்கும் அர்பணிப்பு.. அஜித் உண்மையான ராக்ஸ்டார்” என அஜித்தின் உடற்கட்டை பாராட்டி குறிப்பிட்டுள்ளார். தமிழில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் அவரது நண்பனாக ராணா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.