fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டம்..!

seeman

Tamil Nadu | தமிழ் நாடு

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டம்..!

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட தீர்க்க முடியாத பிரச்சனைகள் போராடிக்கொண்டு இருகின்றார்கள், அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். இந்த திட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் புதன்கிழமை அன்று அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக நாம் தமிழர் கட்சியினர் 66 பேர் மீது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்திற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தில் மண்டல செயலர் விக்ரமும், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர் ஷர்புதீன், உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் திரளானோர் அதில் பலர் பங்கேற்றனர். விழுப்புரம் ,நாகை, கடலூர், புதுவை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தையும் நாட்டில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இத்தகைய இயற்கையை அழிக்கும் திட்டத்தை நிறுத்தி விவசாயிகளையும், மக்களையும் வாழ விட வேண்டும் என்று அதில் முழக்கமிட்டனர்.

ஆனால் போலீசாரிடம் அனுமதி பெறாமல் நடத்தியதாக 66 விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமால் மேற்கு காவல் ஆய்வாளர் மற்றும் வீரமணி தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top