நாட்டையே உலுக்கிய திஷா படுகொலை சம்பவம்.. படமாக்கும் சூர்யாவின் சர்ச்சை இயக்குனர்

இந்தியாவில் சர்ச்சை இயக்குனர்கள் பட்டியலில் இவர் கண்டிப்பாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பார் என்றே கூறலாம். ராம் கோபால் வர்மா சூர்யாவை வைத்து ரத்தசரித்திரம் என்ற படத்தை இயக்கியவர்.  1993-ம் ஆண்டு திருடா திருடா படத்தில் எழுத்தாளராக பணியாற்றியவர்.

இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் சர்ச்சையில் சிக்கி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெறும். அந்த அளவிற்கு கதை அழுத்தமாக இருக்கும் உண்மை கதையை சம்பந்தப்படுத்தி எடுத்திருப்பார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பலமொழிகளில் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ram-gopal
ram-gopal

சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை இந்தியில் ‘வீரப்பன்’ என்ற பெயரில் எடுத்து வெளியிட்டவர்..  ஜெயலலிதா இறந்துபோன நேரத்தில் சசிகலா என்ற படத்தை எடுப்பேன் என்று சர்ச்சையை கிளப்பினார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்த காவல்துறையினர் 4 பேர் அதே இடத்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இதனை இந்திய மக்கள் கொண்டாடினார்கள் என்றே கூறலாம்.

இந்த உண்மை சம்பவத்தை படம் ஆக்குவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

“வழக்கறிஞர் ஏ.பி .சிங் போன்ற ஒரு அசுரன் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களுடன் கால்பந்து விளையாடக்கூடிய ஒரு நாட்டில், மக்கள் எப்போதும் டிஷாவுக்கு வழங்கப்பட்ட உடனடி நீதியை கொண்டாடுவார்கள் என்ற உண்மையை ‘திஷா’ திரைப்படம் தூண்டும்.”

ram-gopal
ram-gopal

இந்த படத்திற்கு திஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. திஷா மற்றும் நிர்பயா போன்ற பெண்களின் பாலியல் வழக்கில் இருக்கும் உண்மைகளை எடுத்துரைக்கும் விதமாக கதை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment