fbpx
Connect with us

Cinemapettai

அசுர வேகத்தில் மேம்பாலத்தை உடைத்துக்கொண்டு பறந்த வந்த கார் – பதற வைக்கும் வீடியோ!

Videos | வீடியோக்கள்

அசுர வேகத்தில் மேம்பாலத்தை உடைத்துக்கொண்டு பறந்த வந்த கார் – பதற வைக்கும் வீடியோ!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்- 3 பேர் படுகாயம் அடைந்தனர். கீழே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நொறுங்கிப்போயின.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் கட்ச்பவுளி ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகும், இந்த. பகுதியில் பயோடைவர்சிட்டி ஃப்ளை ஓவர் என்ற பெயரில் புதிதாக மேம்பாலம் அண்மையில் திறக்கப்பட்டது.

தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்த மேம்பாலத்தில் நேற்று மதியம் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் தடுப்பு சூழல் உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய கார் சினிமா ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சும் வகையில் மேலிருந்து கீழே விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்து விபத்து ஏற்பட்டது.விபத்தில் அந்தப் பகுதியில் ஆட்டோவுக்காக நின்றுகொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க சத்தியவதி என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் இருந்த பிரணிதா, பால்ராஜ் குபேர், மரணமடைந்த சத்தியவதியின் உறவுப்பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கி கீழே விழுந்த கார் தலைகீழாக விழுந்து நசுங்கியதில் அனைவரும் அலறி துடித்தனர்.

இந்தப் பகுதியில் இருந்த மக்கள் போலீசார் துணையுடன் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி கச்பௌலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 40 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பாலத்தில் 100கிமீ வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இதனிடையே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஹைதராபாத் மாநகராட்சி 5 லட்சம்இழப்பீடு தருவாக அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top