kohli

விராத் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல்லிலும் ராசி எடுபடவில்லை என்றே தோன்றுகிறது. உலகத் தரமான பிளேயர்ஸ் இருந்தும் அந்த அணியால் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி, 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

kohli1

ஹைதராபாத் அணியுடனான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம், பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டும், 160-க்கும் குறைவான டார்கெட்டை எட்டிப்பிடிக்க பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தவறவிட்டு விட்டனர்.

அதிகம் படித்தவை:  பார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.! பயம் இருந்தால் பார்க்காதீர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த சிராஜ், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்தார். அதனால், ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகைக்கு அவரை பெங்களூரு அணி வசப்படுத்தியது. சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சிராஜ், சிறப்பாகவே பந்துவீசினார். இருப்பினும், ஆர்சிபியால் வெற்றி பெற முடியவில்லை.

மேட்சின் முடிவு இப்படி இருந்தாலும், ஹைதராபாத்தில் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ், கேப்டன் கோலி உள்ளிட்டோருக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் சர்காரை தொடர்ந்து அஜித்தின் விவேகத்தை கலாய்த்த தமிழ்படம்-2.!
kohli

அதுவும் ஹைதராபாத்தின் அடையாளமான பிரியாணியோடு கோலி அண்ட் கோவை உச் கொட்ட வைத்திருக்கிறார் சிராஜ். மறக்க முடியாத சந்திப்பு என்ற பெயரில் அதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோக்களை சிராஜ் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் ஹைதராபாத் பிரியாணியை கோலி அண்ட் கோ உச் கொட்டியபடி ருசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.