fbpx
Connect with us

ஷிகர் தவான் தான், என எதிர்பார்த்த நேரத்தில் புதிய கேப்டனை அறிவித்துள்ளது சன்ரைஸ்ஸ் ஹைராபாத்! ஐபில் 2018 !

News / செய்திகள்

ஷிகர் தவான் தான், என எதிர்பார்த்த நேரத்தில் புதிய கேப்டனை அறிவித்துள்ளது சன்ரைஸ்ஸ் ஹைராபாத்! ஐபில் 2018 !

கிரிக்கெட் திருவிழாவான ஐபில் இன் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே மாதம் 27 வரை நடைபெறுகிறது.இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

டீம் ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி.  மேலும் ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது. ஐசிசி ஸ்மித்துக்கு ஒரு போட்டி தடையும், பேன்கிராஃப்ட்க்கு 3-டிமெரிட் புள்ளிகள் என தணடனை அளித்தது.

இந்த சம்பவத்தை முழுவதும் விசாரித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு 12 மாத தடையும், பாங்க்ராப்ட் அவர்களுக்கு 9 மாத தடையும் விதித்துள்ளது. மேலும் வார்னர் தன் வாழ்நாள் முழுவதும் கேப்டன் ஆக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

warner smith

ஐபில்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக அஜின்க்யா ரஹானேவை அறிவித்தது. வார்னர் பற்றி கருது எதுவும் சொல்லாது ஹைதராபாத் அணி நேற்று தங்கள் ட்விட்டரில் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விளக்குகிறார். விரைவில் புதிய கேப்டன் யார் என அறிவிப்போம் என்றனர்.

அனைவரும் ஷிகர் தவான் தான் என எதிர் பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று மதியம், நியூ ஸிலாந்தின் கேப்டன் கனே வில்லியம்சன் தான் அணியின் தலைவர் என்று அறிவித்துள்ளது இந்த அணி நிர்வாகம்.

RPT:Hyderabad : Kane Williamson

“மேலும் வில்லியம்சன் இந்த சீசன் அணியின் தலைமை பொறுப்பை ஏற்கிறேன். திறமையான வீரர்களுடன் பணி புரிவதில் ஆர்வமாக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

SRH captain

ஐபில் தொடரில் கலந்துகொள்ளும் 8 அணிகளில் ஹைதராபாத் தவிர்த்து அணைத்து அணிகளுக்கும் இந்திய வீரர்கள் தான் கேப்டன். சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி. மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜிங்கிய ரஹானே. கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ரவிச்சந்திரன் அஸ்வின். டெல்லி டேர்டெவில்ஸ் – கௌதம கம்பிர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – தினேஷ் கார்த்திக். சன்ரைஸ்ஸ் ஹைராபாத் – கனே வில்லியம்சன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top