20 ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்த தியேட்டருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜய் கோபால் என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம், அங்கு அமைந்துள்ள ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஜய் கோபால் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை தியேட்டருக்குள் கொண்டு செல்ல, தியேட்டர் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் தியேட்டரில் 20 ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  சினிமா ஸ்ட்ரைக்கை கண்ணாடி போல் துண்டு துண்டாக உடைக்க கீறல் போடும் கில்டு.! அதிர்ச்சி செய்தி

ஐனாக்ஸ் தியேட்டர் நிர்வாகத்தின் இந்த அநியாய கொள்ளையை எதிர்த்து, ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ஐனாக்ஸ் தியேட்டருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  தொலைக்காட்சியில் ஒளிபரப்பா பாகுபலி 2!

“ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு இரண்டு விலைகள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் தியேட்டர் நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ஐநாக்ஸ் மட்டுமல்லாமல், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் மால்கள், தியேட்டர்களில் இந்த உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்.” என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.