Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

அவரையே ஓப்பனர் ஆக இறக்குங்க, மைக்கேல் ஹசியின் ஆதரவை பெற்ற இளம் இந்திய வீரர்!

இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளனர். முதல் போட்டி பிங்க் பால் வைத்து பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. முதல் இரண்டு நாட்களை ஆதிக்கம் செதுக்கிய இந்திய அணி பேட்டிங்கில் சொதப்ப, படு தோல்வி அடைந்தது. அடுத்தது பாக்சிங் டே டெஸ்ட் தொடங்கவுள்ளது.

முதல் போட்டி முடிந்தவுடன் ஒபனர் ப்ரித்வி ஷா பற்றி பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இருந்தே அவர் பார்ம் அவுட், அவரை ஏன் டீமில் சேர்த்தார்கள், பார்மில் உள்ள கில் அல்லது ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் சி எஸ்கே வீரர் மைக்கேல் ஹசி இந்திய வீரர் ப்ரித்வி ஷாவிற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“இந்திய அணி தேர்வாளர்கள் பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு டெஸ்ட்டில், அதுவும் சிறந்த பவுலிங் டீமுக்கு எதிராக சரியாக விளையாடததற்கு அவரை அணியிலிருந்து நீக்கக்கூடாது.

இந்த வருடம் முதல் தர கிரிக்கெட்டில் 7க்கும் குறைவான சராசரியை வைத்துள்ள ஜோ பர்ன்ஸ் மீது ஆஸி. அணி தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்து அவரை அணியில் எடுத்து தொடக்க வீரராக இறக்கிவிட்டனர். முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை என்றாலும், 2வது இன்னிங்ஸில் பர்ன்ஸ் அரைசதம் அடித்தார்.

தேர்வாளர்கள் ஷா அவர்களிடம் புரிய வைக்க வேண்டும், எங்கள் ஆதரவு உனக்கு உள்ளது, நம்பிக்கையுடன் நீ விளையாடு. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மெல்போர்ன் ஆடுகளம் பிரித்வி ஷாவுக்கு பொருத்தமாக இருக்கும். அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் கிடையாது. ஷா திறமைக்கு வீரர், எனவே நன்றாக விளையாடுவார்.”

21 வயதாகும் பிரித்வி ஷா, இதுவரை 5 போட்டிகள் மட்டுமே விளையாடி 42.4 சராசரியுடன் 339 ரன்கள் குவித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

Prithvi Shaw

Continue Reading
To Top