ஹைதராபாத்தில் உள்ள ராஜ்கோட்  பகுதியை சேர்ந்தவர் ரிங்கேஸ்(26). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ரிங்கேஸ் தனது தந்தை, தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு சில நாட்களிலேயே ரிங்கேஸின் மனைவி தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால், ரிங்கேஸ் எனது தாய், தந்தையை தனியாக விட்டு விட்டு உன்னுடன் தனிக்குடித்தனம் வரமுடியாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த ரிங்கேஸ் மனைவி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் விவகாரத்து கோரி இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நேற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.

தனக்கு விவாகரத்து கிடைத்ததை அடுத்து ரிங்கேஸ், ராஜ்கோட் பகுதியில் உள்ள அனைவருக்கம் ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.