Tamil Nadu | தமிழ் நாடு
காதல் கணவன் விபத்தில் உயிரிழந்ததால் துக்கம்.. மனைவி தற்கொலை
காஞ்சிபுரம்: சென்னை தாம்பரம் அடுத்த ஒரகடத்தில் விபத்தில் கணவன் அகலா மரணம் அடைந்ததால் துக்கத்தில் இருந்த காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பாலாஜி 22 வயது. ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு வருஷத்துக்கு முன் ரசிதா என்ற 20வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற பாலாஜி லாரி மோதிய விபத்தில் இறந்து போனார்.
கணவனின் இறப்பை தாங்கமுடியாமல் துக்கத்தில் அழுதபடியே இருந்த அவரது மனைவி ரசிதா. . வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.. கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரகடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
