fbpx
Connect with us

Cinemapettai

300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படப்புகழ் ஜாக் ஸ்னிடர் இயக்கத்தில், ஹாலிவுட்டில்  நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள “காலா” பட நடிகை.

News | செய்திகள்

300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படப்புகழ் ஜாக் ஸ்னிடர் இயக்கத்தில், ஹாலிவுட்டில்  நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள “காலா” பட நடிகை.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம்.

இப்படத்தில் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருப்பர். ரஜினி மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். முன்னாள் காதலி ரோலில் ஹூமா குரேஷி நடித்திருப்பார்.

32 வயதான ஹூமா குரேஷி பாலிவுட் சினிமாக்களில் பிரபலம் தான். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், மாடெல்லிங், பின்னர் சினிமா என்ட்ரி கொடுத்தவர். கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தில் அறிமுகமான ஹூமா குரேஷி அதனைத் தொடர்ந்து ஜாலி எல்.எல்.பி என பல ஹிட் படங்களில் நடித்தவர். இவர் சமீபத்தில் கூட தீபா மேத்தா இயக்கிய லைலா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

Army of the Dead –  ஆர்மி ஆப் தி டெட் என்ற ஜோம்பி ஜானர் படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ஜஸ்டிஸ் லீக் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜாக் ஸ்னிடர் தான் இப்படத்தை இயக்குகிறார்.

லாஸ் வேகாஸில் ஜோம்பி தாக்குதல் நடக்கும் சமயத்தில் ஒருவன் பெரிய திருட்டு செய்வதற்கு திட்டம் போடுகிறான். அந்த டீம்மில் ஒருவராக தான் ஹுமா நடிக்கவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top