சென்னை: பா. ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளாராம்.

கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் 28ம் தேதி துவங்க உள்ளது. இதை ரஜினியே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

ஹூமா குரேஷி

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ரஜினிக்கும், ஹூமாவுக்கும் 36 வயது வித்தியாசம் உள்ளது. முன்னதாக ரஜினி தனது நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷியுடன் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன்

முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலனை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது.

த்ரிஷா

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்று த்ரிஷா அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அவரை யாரும் பாவம் கண்டுகொள்ளவில்லை.

தனுஷ்

மும்பை பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.