fbpx
Connect with us

ரஜினிக்காக சன் பிக்சர்ஸ் செய்ய உள்ள தரமான சம்பவம்.. அடேங்கப்பா! வாய்பிளக்கும் கோலிவுட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிக்காக சன் பிக்சர்ஸ் செய்ய உள்ள தரமான சம்பவம்.. அடேங்கப்பா! வாய்பிளக்கும் கோலிவுட்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘அண்ணாத்த’. இந்தத் திரைப்படத்தை தல அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரஜினியின் ரசிகர்களிடையே பெருமளவு காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்  பிரம்மாண்டமான முடிவொன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன்பே ‘அண்ணாத்த’ படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்ததோடு, அதில் 12 முதல் 14 மணி நேரம் ரஜினி பங்கேற்றும் இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டது. மேலும் சில உடல் நலக் குறைவு காரணமாக ரஜினியும் சென்னை வந்தடைந்தார் என்பதும், தனது அரசியல் அறிவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பதும்  அனைவருக்கும் தெரிந்தது தான்.

இவ்வாறிருக்க ரஜினியின் உடல் நலனை கருத்தில் கொண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளாராம். அதோடு, படக் குழுவில் உள்ள அனைவரும் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வரை செல்லாமல், படப்பிடிப்பை சென்னையிலேயே பிரம்மாண்ட செட் போட்டு நடத்தவுள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.

annaththe-cinemapettai

எனவே, ரஜினியின் நலனையும், படக்குழுவினரின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முடிவை பார்த்த மற்ற தயாரிப்பு நிறுவனத்தினர் வாயடைத்துப் போய் உள்ளதாக தெரிகிறது.

Continue Reading
To Top