சில காலமாகவே, தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டார் ஹ்ரித்திக். தற்பொழுது வருடத்திற்கு ஒரு படம் வந்தாலே அரிது என்ற நிலைமை ஆகிவிட்டது. சென்ற வருடம் இவர் நடிப்பில் “காபில்” மட்டும் ரிலீஸானது. கண்பார்வை இல்லாதவராகவும், தன் மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருந்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது.

hrithikroshan

இந்நிலையில் ஹ்ரிதிக்கின் புதிய பட ஷூட்டிங் இன்று வாரணாசியில் துவங்கியுள்ளது.

‘ராமானுஜர் ஸ்கூல் ஆப் மேத்ஸ்’ என்ற பாணரில், `சூப்பர் 30′ என்கிற திட்டத்தின் மூலமாக, பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை தேர்தெடுத்து நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்பவர் ஆனந்த் குமார். 2002 இல் இந்த திட்டத்தை துவக்கினார் அவர். பீகாரின் மிக ஏழ்மையான, மற்றும் நன்றாக படிக்கக்கூடிய முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்வார். அவர்களுக்கு ஒரு வருடம் தங்க இடம், மற்றும் உணவையும் இவரே வழங்குவார்.

அதிகம் படித்தவை:  சாலையில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே செய்த வேலையை பாருங்கள்!
AnandKumar – Super 30

இந்நிலையில் ஆனந்த் குமார் அவர்களின் பயோபிக் தான் படம் ஆக உருவாகிறது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  'பாகுபலி-2'வுக்கு அடுத்து,கபாலிக்கு இணையாக மாஸ் காட்டும் விவேகம், எதில் தெரியுமா !!

‘குயின்’, `ஷான்டார்’ ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் பால் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஹ்ரிதிக்கின் தோற்றம் அடங்கிய முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

super 30 hritik roshan

ஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விறைவில் வெளியாகும். இப்படம் 2019 இல் ரிலீஸாகுமாம்.

சினிமாப்பாட்டை கொசுறு நியூஸ்

கனடாவை சேர்ந்த பிஜு மத்தியூ என்பவர் ஆனந்த் குமாரின் வாழைக்கை பற்றி புத்தகம் எழுதி உள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் தாயாராக உள்ளது.