Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்படி இருந்த ஹ்ரித்திக் ரோஷன் இப்படி ஆகிட்டாரே? ஆச்சர்யப்படும் ரசிகர்கள்
Published on
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட்டில் முன்னனி ஹீரோக்களில் ஒருவர். நல்ல உயரம், பிட்டான உடல், அசத்தல் நடிப்பு, கலக்கும் நடனம் என மனிதர் ஒரு ஆல் – ரௌண்டார் தான். கிரேக்க கடவுள் போல் உடல் அமைப்பு உடையவர் என்று பலரும் இவரை புகழ்வதும் உண்டு.
அந்தளவுக்கு க்ரிஷ் படத்தின் வாயிலாக சிக்ஸ் பேக் உடலுடன் இருந்த நம் சூப்பர் ஹீரோ, ஆல் அடையாளம் தெரியாத அளவு மெலிந்துள்ளார்.
பீகாரின் மிக ஏழ்மையான, மற்றும் நன்றாக படிக்கக்கூடிய முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு`சூப்பர் 30′ என்கிற திட்டத்தின் மூலமாக, தயார் செய்யும் ஆனந்த் குமார் என்பவரின் பயோபிக் தான் இப்படம்.
இதற்காக உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார் தனது தோற்றத்தையே மாற்றியுள்ளார்.
