Connect with us
Cinemapettai

Cinemapettai

80 கோடி சம்பளம் குடுங்க என அடாவடி செய்த பிரபல நடிகர்.. செம கடுப்பில் தயாரிப்பாளர்

bollywood-actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

80 கோடி சம்பளம் குடுங்க என அடாவடி செய்த பிரபல நடிகர்.. செம கடுப்பில் தயாரிப்பாளர்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் கிருத்திக் ரோஷன், தனது சினிமா வாழ்க்கையை 1980ம் ஆண்டு வெளியான ‘ஆஷா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தொடங்கினார்.

அதன் பின் அவருடைய அப்பா தயாரித்த படத்திலேயே துணை இயக்குனராக பணியாற்றினார். பின்பு 2000-ல் கதாநாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவருடைய அசத்தலான நடிப்பினால் தொடர்ந்து பல படங்கள் இவரை வந்து சேர்ந்தது. இவர் நடித்த க்ரிஷ், தூம்2, ஜோதா அக்பர் போன்ற படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்து பெண்களின் கனவு கண்ணனாகவே மாறி விட்டார்.

தற்போது முன்னணி பிரபலங்கள் எல்லாம் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த வரிசையில் கிருத்திக் ரோஷன் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதற்காக இவர் ரூ.80 கோடி சம்பளம் கேட்டதால், பாலிவுட் பிரபலங்கள் வாயடைத்துப் போய்விட்டனர்.

ஏற்கனவே வெப் சீரியல் ஒன்றிற்கு அக்ஷய் குமார் ரூ.80 கோடி சம்பளம் வாங்கி இருப்பதால், தற்போது அவருக்கு கொடுத்தது போலவே எனக்கும் ரூ.80 கோடி சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கிருத்திக் ரோஷன்.

சேக்ரெட் சீகேம்ஸ் வெப் சீரியலில் நடிகர் சயிப் அலிகான் வாங்கிய சம்பளத்தைவிட இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாக கிருத்திக் ரோஷன் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top