Tamil Cinema News | சினிமா செய்திகள்
சைக்ளிங் வீடியோவை வெளியிட்ட ஹ்ரித்திக் ரோஷன். கழுவி ஊத்திய நெட்டிசன்கள் ! பொங்கி எழுந்த மும்பை போலீஸ் !
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட்டில் முன்னனி ஹீரோக்களில் ஒருவர். நல்ல உயரம், பிட்டான உடல், அசத்தல் நடிப்பு, கலக்கும் நடனம் என மனிதர் ஒரு ஆல் – ரௌண்டார் தான். கிரேக்க கடவுள் போல் உடல் அமைப்பு உடையவர் என்று பலரும் இவரை புகழ்வதும் உண்டு.
இந்நிலையில் இவர் ராஜவர்தன் ராத்தோர் விடுத்த பிட்னஸ் சாலஞ்சை ஏற்றுக்கொண்டார். மேலும் அதற்காக சைக்ளிங் சென்று தன் செல் போனில் விடியோவும் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் ட்ராபிக்கில் எளிதில் செல்ல சைக்கிள் ஒன்றை வாங்குங்கள், மேலும் பிட்டாக இருங்கள் என்றும் தன் பங்கிற்கு அட்வைஸ் செய்தார்.
இந்த விடியோவை பார்த்த இவரின் ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வந்தனர். மேலும் சிலர் நாங்களும் ஜாகிங் அல்லது சைக்ளிங் செல்வோம் என்றும் கூறினார்.
எனினும் வேறு சிலரோ, செலஃபீ எடுப்பதால் எவ்வளவு மரணங்கள் நிகழ்கின்றது, ஒரு செலிபிரிட்டி இப்படி தவறான முன் மாதிரியாக இருக்கக்கூடாது என்று காட்டமாக பதில் கொடுத்தனர்.
வேறு சிலர் சேப்டி ஹெல்மெட் அணியாமல் இவர் நெரிசலான தெருக்களில் சைக்ளிங் செய்வது தவறு. எவ்வாறு கார் , பைக் ஓட்டும் பொழுது கை பேசி பயன்படுத்துவது குற்றமோ, இதுவும் குற்றுமே என்றனர்.
ஒரு நெட்டிசன், ஒரு படி மேலே சென்று மும்பை போலீஸ் அவர்களை டாக் செய்து, ரூல்ஸ் மீறுகிறார், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? ஹ்ரித்திக் இது போன்று நீங்கள் மைதானத்தில் செய்திருக்கலாம், ஆனால் ரோட்டில் செய்தது தவறு என்றும் கூறியிருந்தார்.
மும்பை போலீசும் “இது எந்த இடம் என்று லொகேஷன் தாருங்கள், நாங்கள் அந்த சரகத்தில் தகவலை பகிர்கிறோம்” என்றும் கூறினார்.
பிட்னெஸ் முக்கியம் தான், எனினும் ஹ்ரித்திக் போன்ற சூப்பர் ஹீரோ சற்று யோசித்து பின்னர் இது போன்ற விடியோவை வெளியிட்டிருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் அவரின் விளக்கம் என்ன வென்று.
