நெருப்பை பற்ற வைத்த சூர்யா.. மாறி மாறி தண்ணீர் ஊற்றும் எச்.ராஜா, தமிழிசை

சூர்யா பற்ற வைத்த நெருப்பு இன்னும் பற்றி எரிகிறது. அதற்கு தமிழிசையும், எச்.ராஜாவும் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஆனால் அது நிற்பதாக இல்லை.

30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? 

மேலும் மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? 

அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகள் எதற்கு அதன் நிலை என்ன?

இதனை எதிர்த்து அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் எல்லாரும் இதைப்பற்றி பேச வேண்டும் எனவும் சூர்யா கூறினார்.

மேலும் கோச்சிங் செண்டர் என்ற பெயரில் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த கேள்விகளை கேட்டதற்கு சூர்யா வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என எச்.ராஜா கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் கனிமொழி இந்தி படிக்கும் போது, மக்கள் இந்தி படிக்கக் கூடாதா? இந்தி விருப்பப் பாடம் என்று அரசு தெளிவாக கூறி உள்ள நிலையில் இது எப்படி திணிப்பாகும் என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கிராமப்புற மாணவர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் இவர் பங்குக்கு இவரும் கேள்வி கேட்கிறார். படிப்பையும் சினிமாவையும் ஒன்றாக பார்ப்பது இவர்களாதான் இருக்கும்.

Leave a Comment