Connect with us

Cinemapettai

காலேஜ் நடத்தி வரும் இவர்.. ரூ.42 கோடிஊழல் செஞ்சிருக்காரு.. அடுத்து இவர் தான் கைது! ஹெச் ராஜா

hraja

Politics | அரசியல்

காலேஜ் நடத்தி வரும் இவர்.. ரூ.42 கோடிஊழல் செஞ்சிருக்காரு.. அடுத்து இவர் தான் கைது! ஹெச் ராஜா

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாகவும் அவர் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார் என்றும் எச்.ராஜா கணித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது: இந்தியாவில் பொருளாதார பாதிப்பு, நேரு காலத்தில் இருந்தே இருக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, கருப்பு பணம் உட்பட வெளியில் இருந்த பணம் எல்லாம் வங்கிகளுக்கே வந்திருச்சு. அதை வைத்துதான், சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் போன்றவை செய்கிறார்கள்.

.அதனாஙர, இப்போது எந்த பொருளாதார பாதிப்பும் நாட்டில் ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் பிரதமர் நாட்டை கொண்டு சென்று கொண்டிருக்கிறார். அதேபோல, விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் அறிவிக்க உள்ளார்.

சாலை விதிகள், ஹெல்மெட் அணிவது என்று பல சிறப்பான திட்டங்களை பிரதமர் முன்னெடுத்துள்ளார் ஆனால் இது எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் . மக்களை குழப்புகிறார்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்தப் போவதாக பொய்யான தகவலை கிளப்பி வருகிறார்கள் இது முட்டாள்தனமான பொய்.

இந்த மாதிரி சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை சமூக விரோதிகளாகக் கருதி மக்களும் விவசாயிகளும் அவர்களை ஒதுக்கிட வேண்டும். ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஊழல் செய்தே இப்படி சொத்துக்களை சேர்த்தனர். அதனால்தான் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் இப்படித்தான், தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அவரும் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார் இவ்வாறு கூறினார்-

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top