Politics | அரசியல்
நான் தொட்டதெல்லாம் துலங்கிறது.. .ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்கவில்லையே.. ஹெச்.ராஜா பதிலடி
நான் தொட்டதெல்லாம் துலங்கிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்கவில்லையே என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா விமர்சனம் செய்துள்ளார். சுப வீரபாண்டியனுக்கு பதிலடியாக இப்படி கருத்து தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா.
அண்மையில் திமுக ஆதரவாளரான எழுத்தாளர் சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘’யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் அவர்களுக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா “தொட்டதெல்லாம் துலங்குகிறது” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில ‘’ஆனால், ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் மன்னிக்கவும் கரப்பான் மாதிரி ஆயிடுச்சே’’எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடுவோம். விரைவில் திமுக ஆட்சி மலரும் எனக் கூறி வந்தார் மு.க.ஸ்டாலின். அடுத்து காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவிலலை. இதனால் திமுகவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமையும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் 13 தொகுதிகளை மட்டுமே வென்று திமுகவின் கனவு நிறைவேறவில்லை.
தற்போது 2 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்திருக்கிறது. இதனை மனதில் வைத்துதான் ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்காமல் போவதாக ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.
