Politics | அரசியல்
வைரமுத்து-வை அடுத்து சிக்கிய பாஜக! இப்போ ஹெச் ராஜா பதிலை பாருங்கள்
மும்பையில் நடிகர் அலோக்நாத் தன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் டைரக்டர் விண்டா நந்தா மீது ஒரு ரூபாய் நட்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். அலோக் நாத்தின் மனைவியும் கூட மனுதார். இந்த புகார் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளனர். மன்னிப்பு கோர வேண்டும் என்பதும் கோரிக்கை. வழக்கு நடக்கட்டும். உண்மை வெளி வரட்டும்.
தினமும் புது புது பெயர்கள் மீ டூ வில் குவிகின்றன.
டைரக்டர் சுபாஷ் கை மீது நடிகை கேட் சர்மா தன்னை மிரட்டி படுக்கைக்கு அழைத்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். டிராக்டர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். ஏன் மூத்த நடிகர் அமிதாப்பச்சனும் இந்த புகாருக்கு தப்ப வில்லை. நடிகை ஷில்பா ஷிண்டே அதெல்லாம் இல்லை. பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன் தான் நடக்கின்றன என்கிறார்.
2013 ல் ஒரு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்தரவு செய்ததாக கூறி ஒரு பேராசிரியர் அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய வைத்த சின்மயி எப்படி பலவீனமானவர் ஆவார்? அந்த வழக்கு என்னவாயிற்று? ஏன் கிடப்பில் போட்டார்கள்? இதையும் பத்திரிகைகள் விசாரித்து எழுத வேண்டும்.
hrajaஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில்,மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஆகவே, ‘திரு.வைரமுத்து அவர்களும் தனது விருதுகளை திரும்ப அளித்துவிட்டு வழக்கு தொடர்வதே சரி’ என பதிவிட்டுள்ளார்.
Pl demand that Mr. Vairamuthu to surrender all the awards given to him https://t.co/reGiMOtJh1
— H Raja (@HRajaBJP) October 17, 2018
