fbpx
Connect with us

உல்லாசக் கப்பலில் பயணம் செய்கையில் என்னென்ன நடக்கும்? இனி அந்த ஆசையே வராதாம்!

India | இந்தியா

உல்லாசக் கப்பலில் பயணம் செய்கையில் என்னென்ன நடக்கும்? இனி அந்த ஆசையே வராதாம்!

உல்லாசக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. பேருந்து, ரயில், விமானம் போன்ற பயணங்களில் ஏற்படாத அனுபவங்களை விட உல்லாச கப்பல்கள் நமக்கு நிறைய அனுபவங்களை தரும்.

ஆனால் நீங்கள் கவனமாக இருக்காவிட்டால், சுகமான நினைவுகளுக்கு பதிலாக, மோசமான அனுபவங்களுடன் உல்லாச கப்பலில் இருந்து திரும்பி வர வேண்டியிருக்கும்.

உல்லாசக் கப்பலில் பயணிக்கும் பலர் பல்வேறு தவறுகளை செய்கின்றனர். இந்த விடுமுறை காலத்தில் எந்தெந்த ஊருக்கு செல்ல வேண்டும், எந்தெந்த கப்பலில் செல்ல வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நம் விடுமுறை காலம் வீணாவதை யாராலும் தடுக்க முடியாது.

முதலில் தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும் , ஏனென்றால் உல்லாசக் கப்பல் சரியான நேரத்தில் கிளம்புவதை யாராலும் தவிர்க்க முடியாது.

உல்லாச கப்பல்களில் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவும். சில சமயங்களில் உல்லாச கப்பலில் உள்ள அனைவரும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றால், வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பை கொண்டு குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு அடிக்கடி கை கழுவ வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் உல்லாசக் கப்பலில் எந்த பானங்கள் பருகலாம், சூழ்நிலைக்கேற்ப எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உல்லாச கப்பலில் ஏறிய உடனே கொண்டாட்ட மன நிலை வந்து விடுவது இயல்புதான். அதற்காக பாதுகாப்பு பயிற்சிகளை தவற விடுவது தவறானது.

பொதுவாக அவசர சூழல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது தொடர்பாக உல்லாச கப்பல்களில், பயணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். லைஃப் ஜாக்கெட்டை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் சொல்லி கொடுக்கப்படும்.

 

Continue Reading
To Top