Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்தப் படத்தில் சூர்யாவை உயரமா காட்டுவதற்கு இதைத்தான் பண்ணினோம்.. போட்டுக் கொடுத்த இயக்குனர்!
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் முன்னிலையில் இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு ஒவ்வொரு பட வெளியீட்டின்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவர் சூர்யா.
அடுத்ததாக அவரது வெளியீட்டில் தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. அதனைத் தொடர்ந்து வாடிவாசல், பாண்டிராஜ் படம் என வரிசைகட்டி நிற்கின்றன. ஒரு காலத்தில் விஜய் அஜித் ஆகிய இருவரையும் அலறவிட்ட சூர்யா தற்போது ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
அப்படி அவரது வெற்றிப் படங்களுக்கு அடித்தளமாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படத்தில் போலீஸ் ஆபீஸராக சூர்யா நடித்து இருப்பார். அந்த படத்துக்காக உடலை கட்டுக்கோப்பாகவும் மாற்றிக் கொண்டார். அப்போதிலிருந்து இப்போது வரை தனது உடலை அப்படியேதான் பராமரித்து வருகிறார்.
இயற்கையில் மற்ற நடிகர்களை விட சற்று உயரம் குறைவான சூர்யா, காக்க காக்க படத்தில் பெரும்பாலும் மற்ற நடிகர்களுக்கு இணையாகவே தன்னுடைய உயரத்தை மெயின்டெய்ன் செய்திருப்பார்.
அதற்கு என்ன காரணம் என்பதை கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மற்ற இயக்குனர்கள் இப்படிக்கூட உயரத்தை மேட்ச் பண்ணலாமா என வியந்துள்ளனர்.
பெரும்பாலும் காக்க காக்க படத்தில் சூர்யாவை உயரமாக காட்டுவதற்காக கேமராவில் லோ ஆங்கிள் ஷாட் வைத்துதான் எடுத்தார்களாம். போலிஸ் கதாபாத்திரத்திற்கு உயரம் மிகவும் முக்கியம்.
ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சூட்டாகாத சூர்யா தனது உடலமைப்பை முரட்டுத்தனமாக மாற்றி தொடர்ந்து பல போலீஸ் படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
