பிரிட்டிஷ் சிரோபிராக்டிக் அசோசியேஷன், ஒருவரது உடல் வாகு தோற்ற நிலையை வைத்து, அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனை வரும் என ஆராய்ந்தது.

இதில் ஒருசில உடல் தோற்ற நிலை உள்ளவர்களுக்கு அதிக முதுகு வலி பிரச்சனை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

ஒவ்வொருவருடைய உடல் வாகும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். முக்கியமாக நிற்கும் போது அனைவரது உடல் நிலையம் ஒரே மாதிரி அமைவது இல்லை.

இனி, ஒருவரது மோசமான உடல் தோற்றம் அவரது எதிர்கால ஆரோக்கியத்தை பற்றி என்ன விஷயங்களை கூறுகிறது என இங்கு காணலாம்…

இந்த ஸ்பூன் பொஸிஷன் என்பது, வட்டமான தோள்பட்டையும், தட்டையான பின்புறமும் கொண்டது போல உடல் தோற்றமாகும்.

இது தான் இரண்டாவது மோசமான உடல் வாகு தோற்ற நிலை என கூறுகின்றனர். இது எதிர்காலத்தில் அதிகம் முதுகு வலி உண்டாக காரணமாக இருக்கும்.

அதிகம் படித்தவை:  பொண்டாட்டி உங்க மேல இண்டரஸ்ட் இல்லாம இருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கலாம் - 10 அறிகுறி!

Image Courtesy

ஏறத்தாழ பத்தில் ஆறு பெண்களிடம் இந்த உடல்வாகு தோற்ற நிலை காணப்படுகிறது. இந்த உடல் வாகு உள்ள பெண்களில் பத்தில் மூணு பேர் அனுதினமும் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.இதற்கு, பெண்களின் தலை பகுதி தவறான நிலை கொண்டிருப்பதே காரணம்.

Image Courtesy

இந்த உடல்வாகு தோற்ற நிலையில் பெண்களின் முது வளைந்த நிலையில் காணப்படும். முக்கியமாக பின்பகுதி இடுப்பு நிலை வாத்து போன்ற மிகவும் வளைந்த நிலையில் இருக்கும்.

இதை ‘hyperlordosis’ என ஆங்கிலத்தில் கூறுகின்றனர். இந்த நிலையில் பின்னாட்களில் அதிக முதுகுவலி ஏற்பட காரணியாக திகழ்கிறது.

Image Courtesy

முதுகு பகுதியை தட்டையாக வைத்திருக்கும் நிலை. இவர்களுக்கு அதிக முதுகு வலி வருவதில்லை. இதை தான் பிளாட் – பேக் பொஸிஷன் என கூறுகின்றனர்.

அதிகம் படித்தவை:  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்!

இந்த உடல்வாகு தோற்ற நிலை கொண்டுள்ள பெண்களுக்கு இடுப்பு வலியோ, கழுத்து வலியோ அதிகம் ஏற்படுவதில்லை.

Image Courtesy

முதுகுவலி ஏற்படாமல் இருக்க தலை முதல் கணுக்கால் வரை ஒரே நேராக இருப்பது போன்ற உடல் தோற்ற நிலையை பின்பற்ற வேண்டும். அமரும் போது, நிற்கும் போது, முக்கியமாக நடக்கும் போதும், நாம் தவறான நிலையில் நடப்பதால் தான் அதிகமாக கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது.

Image Courtesy

இன்று ஒருவரது உடல்வாகு தோற்ற நிலை தவறாகவும், மோசமாகவும் அமைவதற்குமுக்கிய காரணமாக இருப்பது தவறான நிலையில் அதிகம் கணினி மற்றும் மொபைல் பயன்படுத்துவது தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.