Tamil Nadu | தமிழ் நாடு
ஏசி இல்லாமல் வீடு குளிர்ச்சியா இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க போதும்
வீட்டினுள் வெப்ப காற்று வராமல் இருப்பது எப்படி, எளிமையான முறையில் பயன்படுத்தி வீட்டினுள் வெப்பக்காற்று வருவதை தவிர்க்கலாம். இனி ஏசி தேவையில்லை.
வீட்டில் பகல் முழுவதும் மொட்டை மாடி வெயிலை ஏற்றுக் கொள்கிறது. அதனால் வீடுகளில் சீலிங் ஃபேன் பயன்படுத்தும்போது வெப்பக்காற்று மிக விரைவில் தரைக்கு இறங்குகிறது. இதனை ஈசியாக தவிர்க்கலாம். அதாவது மொட்டை மாடியில் சாக்குப்பை மற்றும் வெள்ளை சுண்ணாம்பு போன்றவை பயன்படுத்தி வெயில் நேரடியாக படுவதை தவிர்க்கலாம்.
இதெற்கென்றே வெள்ளை சுண்ணாம்பு குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
மற்றொரு முறை
நாம் இரவு நேரத்தில் சீலிங் ஃபேன் பயன்படுத்தினாலும் வெப்ப காற்று தரைக்கு இறங்கும். அதனால் அதனை தவிர்க்க டேபிள் ஃபேனை பயன்படுத்தலாம், மேலும் ஜன்னல் வழியாக வரும் இயற்கைக் காற்று நமக்கு ஏற்றவாறு திருப்பி வைத்து குளிர்ச்சியான காற்று பெறலாம்.
அதுமட்டுமில்லாமல் டேபிள் ஃபேனுக்கு சிறிது தொலைவில் ஒரு வாளி தண்ணீர் வைத்தால் கூட அதன் மூலம் குளிர்ச்சி பெறலாம்.
மேலும் ஏதேனும் பழைய பெட் ஷீட் இருந்தால். அதனை தண்ணீரில் நனைத்து ஜன்னலில் தொங்கவிடலாம், ஏனென்றால் வெப்பம் ஒரு பக்கம் படும்போது ஆவியாதல் ஆகும். மற்றொரு பக்கம் அதன் மூலம் குளிர்ச்சி கிடைக்கும். இதன்மூலம் வீட்டினுள் வெப்பக்காற்றை தவிர்க்கலாம் என கூறியுள்ளனர்.
