பாகுபலியில் பல மாதங்களாக நடித்து வந்த நடிகர்களை உற்சாக மன நிலையில் வைத்திருக்க புதிய யுக்தி ஒன்றை கடைபிடித்ததாக இயக்குநர் ராஜ மெளலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி 2, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் படமாக்கப்பட்டு வந்ததால், அதில் நடித்த பல நடிகர்கள் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தனர்.

அதிகம் படித்தவை:  #HappyBirthdaySachin கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் 44-வது பிறந்தநாள் இன்று

இந்நிலையில் இந்த நீண்ட காலகட்டத்தில் பாகுபலியில் நடித்த நடிகர்களை உற்சாகமான மனநிலையில் வைத்திருக்க ஒரு புதிய யுக்தியை கடைபிடித்ததாக இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். இந்த புதிய யுக்தியால் ஏற்பட்ட உற்சாகத்தால், அந்த நடிகர்கள் பல மாதத்திற்கு சிறப்பாக படப்பிடிப்பில் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த யுக்தி என்ன தெரியுமா?

அதிகம் படித்தவை:  அழகு குட்டி செல்லம் விமர்சனம் | Azhagu Kutti Chellam Review

பாகுபலியில் கிராபிக்ஸ் இணைக்கப்படாமல் எடுக்கப்படும் காட்சிகளை, சில நாட்களுக்கு பிறகு கிராபிக்ஸ் காட்சியாக மாற்றி, குறிப்பிட்ட அந்த நடிகர்களுக்கு ராஜ மெளலி போட்டுக் காட்டி வந்துள்ளார். தங்களுடைய நடிப்பு கிராபிக்ஸ் காட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ச்சியடையும் நடிகர்கள், மேலும் உத்வேகமாக படத்தில் நடித்தார்களாம். இதுதான் ராஜமெளலி மேற்கொண்ட புதிய யுக்தி.