Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-jyothika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் படத்திற்கு ஜோதிகாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? குடும்பமாக இருந்தாலும் காசு காசுதான்!

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகி அமேசான் ப்ரைமில் மே 29-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை என்ற கருத்தை முன்வைத்து எடுத்திருந்த இந்த படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பெண் பிள்ளைகளையும் பெண்களையும் கவரும் விதத்தில் அமைந்தது இந்தப் படம்.

இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் படங்களுக்கு இனி பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும் படி விளம்பரங்கள் செய்து படத்தை பிரமோட் செய்து விட்டனர். அந்த வகையில் ரசிகர்களுடன் படத்தின் பிரமோஷனுக்காக ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோர் நேரலையில் வந்தனர்.

அப்போது ரசிகர்கள் பலவகையான கேள்விகளை எழுப்பினர். அதில் ஒன்றுதான் 36 வயதினிலே படத்தில் ஜோதிகாவின் சம்பளம் எவ்வளவு எனவும், பொன்மகள் வந்தாள் படத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள் எனவும் சூர்யாவிடம் கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே ஜோதிகாவுடையதுதான் என்றும், எங்களது சம்பள முறையை சுழற்சி முறையில் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஜோதிகாவுக்கு இந்த படத்தில் சுமார் ஒரு கோடி சம்பளம் இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

சொந்தப் படமாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கொடுத்து விடுகிறார் சூர்யா. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கூட கார்த்திக்கு ஒரு கணிசமான சம்பளம் கொடுத்ததாக செய்திகள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top