சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்தத் திருமண நிகழ்ச்சி, கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

ஹன்சிகா, தம்மன்னாவுடன் ஜோடியாக விளம்பரத்தில் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்அருள். மேலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளேன் என்று அதிரடியாக கூறியவர்.

அதிகம் படித்தவை:  தினகரன் கைது: அலறும் திரையுலக தொடர்புகள்: தப்பி ஓடிய புஷ்டி நடிகை

இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலுள்ள பல்வேறு தொழில் அதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் வந்திருந்தனர்.

திருமண நிகழ்ச்சியின் சிகரமாக பெண் அணிந்திருந்த தங்க உடை இடம் பெற்றது. தங்கத்தால் நெய்யப்பட்ட இந்த உடையின் மதிப்பு 13 கோடியாம். அனைவருடைய பார்வையும் அந்த டிரஸ்ஸில் தான் இருந்தது.

விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இலவச சேலை வழங்கப்பட்டது. 6 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அதிகம் படித்தவை:  அத்துமீறுகிறதா தமிழக சர்கார். இரவு நேரத்தில் முருகதாஸை கைது செய்ய முயன்றதா போலீஸ்.

பெங்களூருவில் முன்னாள் அமைச்சர் 500 கோடி செலவில் தனது மகள் திருமணத்தை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போன்று பல நூறு கோடி ரூபாய் செலவில் சரவணன் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.