Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தில் மொத்தம் எத்தனை சண்டை காட்சிகள் தெரியுமா? தியேட்டரில் சரவெடி தான்!
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மொத்த பேரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் தான்.
கைதி என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்ததால் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என பலவிதமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு தகுந்தார்போல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது இன்னும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது.
ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் தற்காலிகமாக படத்தின் வெளியீட்டு தேதியை குறித்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் எத்தனை சண்டை காட்சிகள் இருக்கிறது என்பதை படத்தில் பைட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா சமீபத்திய டூரிங் டாக்கிஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் மொத்தம் ஆறு சண்டைக் காட்சிகள் உள்ளதாம். சண்டை வைக்க வேண்டுமே என வைக்காமல் கதையோட்டத்துடன் கூடிய சண்டைக் காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
கைதி படத்திலும் அதே மாதிரிதான். கதையோட்டத்துடன் அந்த சண்டைக் காட்சிகள் அமைந்ததால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அடுத்தடுத்த வருடங்களில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
