சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் ஜுலை 22ம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது என கூறப்படுகின்றது.

இப்படத்தை எல்லோரும் பார்க்கலாம் என்று யு சான்றிதழ் வழங்கியுள்ளனர், ஆனால், இப்படத்தின் சென்ஸாரில் கிட்டத்தட்ட 10 காட்சிகள் வரை கட் விழுந்த்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ரஞ்சித் போராடியும் அந்த காட்சிகளை வெட்டினால் தான் யு, இல்லையேல் முடியாது என சென்ஸார் அதிகாரிகள் கூற, பிறகு கட் விழுந்த பிறகு தான் யு சான்றிதழ் கிடைத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.