முதல் முறை நாயகன் அவதாரம் எடுத்துள்ள சதீஷின் நாய் சேகர் படம் வெற்றியா?

பொங்கல் ரேசில் இருந்து பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்கள் பின்வாங்கியதால் சிறிய பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கி அதகளம் செய்து வருகின்றன. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள படம் தான் நாய் சேகர். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள இந்த படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

சதீஷ், பவித்ரா லக்ஷ்மி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நாய் சேகர். படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதைப்படி எதிர்பாராத விபத்தினால் நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதே நாய் சேகர் படத்தின் கதை.

இதுவரை காமெடியனாக மட்டும் நடித்த சதீஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்துள்ளார். அதேபோல் பவித்ரா லட்சுமிக்கு இது முதல் படம் என்பதால் ஆங்காங்கே சற்று தடுமாற்றம் தெரிகிறது. மற்றபடி படம் சூப்பர். இந்த படத்தில் உள்ள முக்கிய கேரக்டரே நாய் தான். உண்மையில் அது தான் படத்தின் ஹீரோ என்றே கூறலாம்.

படையப்பா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நாய் செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் ஹைலைட். அதுமட்டுமல்ல அந்த நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் படத்தில் காமெடி இன்னும் சற்று தூக்கலாக உள்ளது என ஆடியன்ஸ் கூறியுள்ளார்.

என்னதான் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்தாலும் இதுவும் காமெடி ஹீரோ சப்ஜெக்ட் தான் என்பதால் பெரிய அளவிலான ஹீரோயிஸம் எதுவும் படத்தில் இல்லை. அதேபோல் படையப்பா என்ற பெயரில் நடித்துள்ள நாய் ரஜினி ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. மேலும் ஒரு நாய் மனிதனால் ஒரு மனிதன் நாயானால் என்ன நடக்கும் என்ற சம்பவத்தை காமெடி கலந்த பேண்டஸி படமாக அனைவரும் குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும்படி மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போது வரை ட்விட்டரில் நாய் சேகர் படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட் மட்டுமே கிடைத்து வருகிறது. குடும்பத்துடன் சென்று பார்க்க அதுவும் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க ஒரு நல்ல படம் தான் நாய் சேகர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்