புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எப்படி இருந்த கோபி இப்படி ஆயிட்டான்.. சக்களத்தி வீடு வரை சென்று வம்பு இழுத்த பாக்யா

கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இப்போது ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவ்வளவு நாள் தன்னுடன் இருந்த மகள் இனியாவை கண்டித்த காரணத்தினால் தன்னை தூக்கி எறிந்து விட்டு பாக்யாவிடம் சென்று விட்டாரே என்ற மனக்கவலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டி வருகிறார்.

ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்து காரை ஓட்ட முடியாமல் ரோட்டிலேயே விழுந்து கிடக்கிறார் அப்போது பாக்யாவிற்கு ஃபோன் வந்ததால் கோபியை காப்பாற்றி வண்டியில் அழைத்து வருகிறார். அந்த சமயம் 2வது திருமணம் செய்தது மகா தவறு என பாக்யாவிடமே ராதிகாவை பற்றி கோபி புலம்பித் தள்ளுகிறார்.

Also Read: டிஆர்பி-யை அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்.. பட்டையைக் கிளப்பும் சீரியல்களின் ரேட்டிங் லிஸ்ட்

பாக்யாவை டிரைவராக நினைத்துக் கொண்டு அவரிடமே ராதிகாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.அப்போது ராதிகாவிடம் இருந்து போனில் அழைப்பு வருகிறது. ‘பார்த்தீர்களா டிரைவர் கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கிற, திட்டுவதற்காகவே போன் செய்வார். ஆனால் பாக்யா இப்ப ரொம்ப ஸ்டைலா மாறிட்டா, இங்கிலீஷ் எல்லாம் பேசுகிறார்.

புதுசு புதுசா நிறைய விஷயங்களை கத்துகிறா, அவர் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா! நான் தான் ராதிகாவை கட்டிக்கிட்டு சந்தோசம் இல்லாமல் இருக்கிறேன்’ என்று மனதில் இருப்பதை உளறிக் கொட்டி விட்டார். அப்போது பாக்யாவிற்கு, கோபி இப்படி மாறிவிட்டாரே என்று வருத்தப்பட்டார்.

Also Read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

இதனால் பாக்யாவும் ராதிகா வீட்டில் கோபியை விட்டு விடுவதற்காக செல்கிறார். அப்போது ராதிகாவை பார்த்து, ‘மூக்கு முட்ட குடிக்கும் அளவுக்கு கோபி இப்படி மாறிவிட்டார்!’ என்று நக்கலாக பேசுகிறார். ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் குடிகாரராக மாறிவிட்டார் என்பதை குத்தலாக பேசுகிறார்.

உடனே கோபத்தில் ராதிகாவும் நீங்கள் கோபிக்கு யார்? எதற்காக அவரை அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார். உடனே பாக்யா என்னுடைய தோழியின் கணவர் அல்லவா! அவர் குடித்துவிட்டு நடுரோட்டில் கிடப்பதை பார்த்துவிட்டு எப்படி செல்வது என்று பதில் கொடுக்கிறார். இப்படி கோபிக்காக பாக்கியலட்சுமி சீரியலில் காரசாரமான சக்காளத்தி சண்டை ஏற்பட்டுள்ளது.

Also Read: மெரினாவில் மீண்டும் வெடிக்கும் புரட்சி.. இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

- Advertisement -

Trending News